தமிழ்நாடு

மதுரை அரசு மருத்துவமனையில் மீன் வியாபாரத்திற்கு அனுமதி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2வது மாடி வரை மீன் வியாபாரம் செய்ய அனுமதி அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2வது மாடி வரை மீன் வியாபாரம் செய்ய அனுமதி அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் தமிழகத்தின் முக்கிய உயர்சிகிச்சை மையமாக இருக்கும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின், மேல்தளத்தில் உள்ள சிறப்பு சிகிச்சை பிரிவில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு அவர்கள் இருப்பிடம் தேடி வந்து, மீன் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேல் தளங்களுக்கு செல்லும் ஓடுதளங்கள் வழியாக மீன் கடைக்காரர் இருசக்கர வாகனத்தில் சென்று, மீன் விற்பனை செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரம் காக்க வேண்டிய மருத்துவமனையில், மீன் விற்பனை செய்வது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்