சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட ராஜகோபால், உடல்நிலையை காரணம் காட்டி சரண் அடைய அவகாசம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து சரண் அடைந்த அவர், நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை அரசு மருத்துவமனையில் ராஜகோபால் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது. இதனையடுத்து ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் சேர்க்க அனுமதி கோரி அவரது மகன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் சேர்க்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ராஜகோபால், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.