தமிழ்நாடு

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசியதாக வழக்கு - இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் அளித்த நீதிமன்றம்

பொதுக்கூட்டத்தில் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

தந்தி டிவி

நீதிமன்ற உத்தரவுபடி திரைப்பட இயக்குநர் ரஞ்சித், 2 வது நாளாக திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாளில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் அளித்த கும்பகோணம் நீதிமன்றம், திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் 3 நாட்கள் நேரில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று கையெழுத்திட்ட ரஞ்சித், இன்று இரண்டாவது நாளாக நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். அவருடன் நீலப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் 50க்கும் மேற்பட்டோர் வந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்