நிலத்தடி நீர் வற்றியதால் காய்ந்து வரும் தென்னை மரங்கள் :
பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றியதால் தென்னை மரங்கள் காய்ந்து வருகின்றன. தேனி மாவட்டம் பெரியகுளம், தேவதனபட்டி, கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி, உள்ளிட்ட பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய மழை பெய்யாத காரணத்தால் இங்குள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் வற்றியது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள தென்னை மரங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகின்றன. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்னை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். காய்ந்த தென்னை மரங்களுக்கு, அரசு உரிய நிவார்ணம் வழங்க வேண்டும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.