தமிழ்நாடு

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது.

சென்னை மாநகரில், அண்ணா சாலை , ஆயிரம்விளக்கு , நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது.

தந்தி டிவி

சென்னை மாநகரில் அண்ணா சாலை , ஆயிரம்விளக்கு , நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது. கும்பகோணத்தில் பலத்த காற்று இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை பெய்தது. தாராசுரம், வலங்கைமான், அம்மாசத்திரம், திருநாகேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது. இந்த மழை சம்பா நெல் நடவுக்கு பயன் தரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நாகை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. வேளாங்கண்ணி, கீழ்வேளூர், கீழையூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் விடிய விடிய மழை நீடித்தது. இதன் காரணமாக வைகை அணை நீர்பிடிப்பு பகுதியான வருசநாடு, கடமலைக்குண்டு, வெள்ளிமலை, மேகமலை ஆகிய மலைகிராமங்களில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

இடி மின்னலுடன் பெய்த கனமழை - வெப்பம் தணிந்து இதமான சூழல்

ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சி அளித்ததோடு அதிலிருந்து தூர்நாற்றம் வீசியதால் பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகினர். கனமழை காரணமாக ராமேஸ்வரத்தில் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி