நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த குறுவை கால நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அறுவடைக்கு இன்னும் 15 நாட்களே இருந்த நிலையில், நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சாய்ந்திருப்பது, விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நாகை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.