ஊட்டியில் சூறைக்காற்றுடன் கனமழை...
நீலகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. ஊட்டி, அவிலாஞ்சி, தொட்டபெட்டா, நடுவட்டம், தேவாலா, முதுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. மாலை முதலே அடர்த்தியான மேகமூட்டம் காணப்பட்டதால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி, வாகனங்கள் சென்றன. மேலும் விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் குடை பிடித்தவாறே இயற்கை அழகை ரசித்தனர்.
திடீர் மழையால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி...
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் பெய்த திடீர் மழையால், சுற்றுலா பயணிகள், மகிழ்ச்சியடைந்தனர். கோடை வெயிலில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் மாமல்லபுரத்தில் அரை மணி நேரத்திற்கு மழை பெய்தது. இதனால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.