தமிழ்நாடு

இருளில் மூழ்கி கிடக்கும் ரயில் நிலையம் - சமூக விரோத செயல்கள் அரங்கேறுவதாக புகார்

சிதம்பரம் ரயில் நிலையத்தில் பெரும்பாலான விளக்குகள் எரியாததால், சமூக விரோத செயல்கள் அரங்கேறுவதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தந்தி டிவி

சிதம்பரம் ரயில் நிலையத்தில் பெரும்பாலான விளக்குகள் எரியாததால், சமூக விரோத செயல்கள் அரங்கேறுவதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சிதம்பரம் ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் மட்டுமே விளக்குகள் எரிகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நடைமேடைகளில் எப்போதுமே விளக்குகள் எரிவதில்லை. இதே நிலைதான் ரயில் நிலையத்தின் சரக்குகள் இறக்க பயன்படும் இரண்டு மேடைகளும் இருளிலேயே மூழ்கி கிடக்கிறது. இந்த நடை மேடைகளில் உயர்மின் கோபுர விளக்குகள் இருந்தாலும் அவைகள் பெரும்பாலும் எரியாமல் அனைத்தே வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில் பயணிகளின் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முட்புதர்கள் போன்ற அடர்த்தியான இடமாக இந்த நடைமேடைகள் இருப்பதால் ரயில் நிலையத்தில் சமூக விரோத செயல்கள்தான் அதிகளவில் அரங்கேறுவதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுளளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்