சென்னை வேளச்சேரி ரயில்வே துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. போலீஸ் உதவியுடன், ரயில்வே, வருவாய், சி.எம்.டி.ஏ, மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து, இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நிலங்களுக்கு பட்டா பெற்று 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் தங்களுக்கு அரசு மாற்று இடம் வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.