தமிழ்நாடு

கேட் கீப்பர் என்னை தாக்கினார் - அதிமுக எம்.பி போலீசில் புகார்

கேட் கீப்பர் மணிமாறன் தன்னை தாக்கியதாக கூறி அதிமுக எம்.பி. உதயக்குமார், அம்மையநாயக்கனூர் போலீசில் புகார்.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே திருச்செந்தூரிலிருந்து பாலக்காட்டிற்கு பாசஞ்சர் ரயில் சென்று கொண்டிருந்தது. இதையடுத்து கொடைரோடு-அம்பாத்துரை இடையே அழகம்பட்டி ரயில்வே கேட்டை, கேட் கீப்பர் மணிமாறன் மூடியுள்ளார். இதனால் அந்த சாலையில் காத்திருந்த திண்டுக்கல் அதிமுக எம்.பி. உதயகுமார், தனது கார் வரும் போது எப்படி கேட்டை மூடலாம் எனக்கூறி, கேட் கீப்பரை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் ரயில்வே கேட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர், இரவு ஏழரை மணியளவில் மதுரையில் இருந்து பாசஞ்சர் ரயில் வந்த போது கேட்டை மூடாமல், கேட் கீப்பர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால், அந்த ரயில் சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு கேட்டை மூடப்பட்டதால், ரயில் மீண்டும் புறப்பட்டது. இது குறித்து கேட் கீப்பர் மணிமாறன், கொடை ரோடு ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, கேட் கீப்பர் மணிமாறன் தன்னை தாக்கியதாக கூறி அதிமுக எம்.பி. உதயக்குமார், அம்மையநாயக்கனூர் போலீசில் புகார் செய்துவிட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்