ஈரோட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த இன்டா பிரபலம் ராகுலின் இறுதி ஊர்வலத்தில் யூடியூபர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள அல் அமீன் தர்காவில் உள்ள மயானத்தில் ராகுலின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. டான்ஸ் மாஸ்டரான இவர், யூடியூப் சேனலை நடத்தி வந்ததோடு, ஏழை எளியோருக்கு பல உதவிகளையும் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.