தமிழ்நாடு

2-வது நாளாக வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

பிரதமர் மோடி பொய்களை கூறி தேர்தலில் வெற்றி பெறுவதாக கா​ங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி, சுமார் 4 லட்சத்து 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் நன்றி தெரிவிப்பதற்காக 3 நாள் பயணமாக அவர் கேரளா சென்றுள்ளார். முதல் நாளான நேற்று கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 15 இடங்களில் பொதுமக்களை சந்தித்து அவர் நன்றி தெரிவித்தார். இந்நிலையில் 2- வது நாளான இன்று வயநாடு மாவட்டத்தின் கல்பெட்டா சென்றார். அவருக்கு சாலையின் இருபுறமும் திரண்ட பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி பொய்களை கூறி தேர்தலில் வெற்றி பெறுவதாகவும், நாட்டை பிரித்தாளும் சூழ்ச்சியில் அவர் ஈடுபடுவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்