தமிழ்நாடு

தந்தி டிவியில் ரகசியங்களை அவிழ்த்துவிட்ட ராதிகா.. சில மணி நேரங்களில் திடுக் திருப்பம்

தந்தி டிவி

தந்தி டிவியில் ரகசியங்களை அவிழ்த்துவிட்ட ராதிகா.. சில மணி நேரங்களில் திடுக் திருப்பம்

கேரளாவில் கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளின் ஆபாச காட்சிகளை பகிர்ந்ததாக நடிகை ராதிகா தொலைக்காட்சி பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார் இந்நிலையில் இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரித்து விபரங்களை சேகரிக்க கேரள நடிகர்களின் பாலியல் புகார்களை விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழு திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடிகை ராதிகாவிடம் நேரடியாக வாக்குமூலம் பெறுவதற்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

கேரளாவில் கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளின் ஆபாச காட்சிகள் பகிர்வது தெரியவந்தவுடன், அதை நடிகை ராதிகா ஏன் வெளிப்படுத்தவில்லை என, மலையாள நடிகை பாக்யலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரளாவில் கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளின் ஆபாச படங்களை பகிர்வதாக நடிகை ராதிகா சரத்குமார் கூறியது தொடர்பாக, மலையாள நடிகை பாக்யலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார். இதனை அன்றே வெளிப்படுத்தியிருந்தால் அதுபோன்ற குற்றங்கள் தொடராமல் தடுத்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்திலும், கேரளாவிலும் பிரபலமான ராதிகா, வேறு பெண்களுக்கு நிகழ்ந்த சம்பவமாக கருதி இதை மறைத்திருந்தால் அது சரியல்ல என்றும் நடிகை பாக்யலட்சுமி குறிப்பிட்டுள்ளார். ஒரு குற்றம் நிகழும்போது அதை பார்த்துவிட்டு வாய்மூடி நிற்பது அதைவிட பெரிய குற்றம் எனவும் நடிகை பாக்யலட்சுமி கூறியுள்ளார். ஆண்களை பேசித் திருத்த முடியாது என்றும் சட்ட ரீதியில்தான் திருத்த முடியும்... தங்களுக்கு கேரவன் வேண்டாம் என்று கூறும் தைரியம் பெண்களுக்கு வேண்டும் என்றும் நடிகை பாக்யலட்சுமி தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்