தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும் என்பதே இலக்கு என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா என்றாலே மரணம் தான் என்று நினைக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். இதர நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா சோதனை நடத்தப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்