தமிழ்நாடு

ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கான தகுதி மதிப்பெண் அதிகரிப்பு

ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேருவதற்கான தகுதி மதிப்பெண்ணை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

தந்தி டிவி

கடந்த 2002-2003ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேருவதற்கு ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர், பழங்குடியினருக்கு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதுமானது என இருந்தது. பிற வகுப்பினர்கள் 45 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் எனவும் அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்காக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, "தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் 2014ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆசிரியர் பயிற்சி படிப்பு மாணவர் சேர்க்கைக்கு 2019-2020ஆம் கல்வி ஆண்டு முதல் பொதுப்பிரிவினருக்கு 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற வேண்டும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் 45 விழுக்காடு மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே