தமிழ்நாடு

"எனது வீட்டில் சோதனை நடக்கவில்லை" - சிறைத்துறை துணைத் தலைவர் மறுப்பு

தனது வீட்டில் சோதனை நடந்ததாக வெளியான செய்தியை சிறைத்துறை துணைத் தலைவர் முருகேசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார் .

தந்தி டிவி

புழல் சிறை வளாக குடியிருப்பில் உள்ள டிஐஜி வீட்டில் நள்ளிரவு வரை சோதனை நடந்ததாக தகவல் வெளியாகியது. இதை மறுத்து விளக்கம் அளித்துள்ள சிறைத்துறை துணைத் தலைவர் முருகேசன், தானே சோதனை செய்து செல்போனை பறிமுதல் செய்ததாக தெரிவித்துள்ளார்.

சிறைத்துறையில் தாம் நற்பணிகளைச் செய்துள்ளதாக கூறியுள்ள அவர், சுமார் 60 தண்டனை சிறைவாசிகளை சுமார் 110 கிலோ மீட்டர் தூரம் வரை வெளியில் அழைத்துச் சென்று அரசு மருத்துவமனை, பள்ளிகள் உள்ளிட்ட 30 பொது இடங்களை தூய்மைப்படுத்தி இருப்பதாக விவரித்துள்ளார். இது போன்று இந்தியாவில் வேறு எங்கேனும் செய்து உள்ளார்களா? என்று கேள்வி எழுப்பி உள்ள முருகேசன் , சிறையில் ஏராளமான விவசாய பொருட்களை உற்பத்தி செய்து இருப்பதாவும் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்