தமிழ்நாடு

"வட சென்னை" திரைப்படப்பாணியில் புழல் சிறைச்சாலையில் செல்போன்கள் கண்டுபிடிப்பு

வட சென்னை திரைப்பட பாணியில் புழல் மத்திய சிறைச்சாலை கழிவறையில் செல்போன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி
வட சென்னை திரைப்பட பாணியில் புழல் மத்திய சிறைச்சாலை கழிவறையில் செல்போன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை மத்திய புழல் சிறையில் செல்போன்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கைதிகள் பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் புழல் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் 80க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது விசாரணை கைதிகள் இருக்கும் அறை மற்றும் கழிவறையில் , மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. செல்போன்கள் சிறைச்சாலைக்கு வந்தது எப்படி என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்