சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி புதுக்கோட்டையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அப்போது, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ரோஜாமலர் கொடுத்து இனி சாலையில் செல்லும்போது தலைக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினர்.