தமிழ்நாடு

ஒவ்வொரு சொட்டு நீரின் அவசியத்தை பொட்டில் அடித்து சொல்லும் காட்சிகள்

தந்தி டிவி

புதுக்கோட்டை அருகே ஆற்றை தோண்டி குடிதண்ணீரை எடுத்து வரும், அவலநிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் சிறுகாசாவயல் கிராமத்தில், கடந்த ஓராண்டிற்கு முன்பு ஊராட்சி சார்பில் 2 குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வந்தாகவும், தற்போது 2 மாத காலமாக தண்ணீர் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, வெள்ளாற்றில் ஊற்று தோண்டி குடிநீரை எடுத்து, குடங்களில் ஏந்தி வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மழைக்காலங்களில் ஊற்றுநீரை எடுக்க முடியாமல் சிரமப்படுவதாக தெரிவித்த கிராம மக்கள், தூய்மையான குடிநீர் தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்