தமிழ்நாடு

வாட்ஸ்அப் குழுவால் சிக்கிய வடமாநில கொள்ளையர்கள்

புதுக்கோட்டையில் வடமாநில கொள்ளையர்களை பிடிக்க வாட்ஸ்அப் குழுவே உதவியதாக கூறும் போலீசார், வங்கி ஒன்றில் அவர்கள் கொள்ளையடிக்க திட்டமிட்ட முயற்சியும் முறியடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

திருச்சியில் பிரபல நகைக்கடையில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, கொள்ளையர்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக வட மற்றும் தென் மாநில காவல்துறை அதிகாரிகள் அடங்கிய வாட்ஸ் அப் குழுவில், திருச்சி தனிப்படை போலீசார், கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்று, மகாராஷ்டிராவை சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர், இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் குறித்த விவரங்களை, வாட்ஸ்அப் குழுவில் செல்போன் எண்ணுடன் பதிவிட்டிருந்தார்.

அதன்பேரில், புதுக்கோட்டையில் பதுங்கியிருந்த 6 வடமாநில கொள்ளையர்களையும் செல்போன் சிக்னல் மூலம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். திருச்சி நகைக்கடை கொள்ளையில் அவர்களுக்கு தொடர்பு இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. எனினும், தீவிர விசாரணையில் கடந்த மாதம் காங்கேயத்தில் உள்ள வங்கி ஒன்றில் அவர்கள் கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து, கொள்ளையர்களிடம் விசாரணை மேற்கொள்ள, திருப்பூர் மாவட்ட போலீசார் திருச்சி வர உள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை