"உங்க கிட்ட எதும் கேட்டேனா..? தள்ளுங்கம்மா" - அரசு பள்ளியில் அதிரடி காட்டிய கலெக்டர் புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அரசுப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் அருணா திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களிடம் உணவின் தரம் குறித்துக் கேட்டபோது சமையலர் பதிலளிக்க முயன்றதால், தான் குழந்தைகளிடம் கேட்பதாகக் கண்டித்த ஆட்சியர், நேரடியாக மாணவர்களிடம் உணவின் தரம் குறித்துக் கேட்டறிந்தார்.