இங்கு மிக குறைந்த அளவு காலை மதியம், மாலை வேளைகளில் உணவுகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு இன்று முதல் 30 நாட்களுக்கு, தி.மு.க. சார்பில் அம்மா உணவகத்தில் இலவசமாக அனைவருக்கும் உணவுகள் வழங்கப்படும் என்று அக்கட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை புதுக்கோட்டை அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு 30 நாட்களுக்கு இலவசமாக உணவுகள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் ரகுபதி சட்டமன்ற உறுப்பினர் முத்து ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.