தமிழ்நாடு

சிறுமியை கொலை செய்து கைதான இளைஞர் தப்பி ஓட்டம் - தப்பியவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம்

புதுக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்முறை செய்து கைதான இளைஞர் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் 7 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக போலீசார் குற்றவாளி ராஜாவை வாகனத்தில் அழைத்து வந்தனர். அப்போது மருத்துவமனையில் போலீசாரின் பிடியில் இருந்த ராஜா, திடீரென தப்பி ஓடினார். இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் தப்பி ஓடிய வனப்பகுதியில் ஏராளமான போலீசார் முகாமிட்டு அவரை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மூன்று ட்ரோன் கேமராக்கள் மூலம் தப்பிய இளைஞர் ராஜாவை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, தப்பி ஓடிய கைதியை கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதால் விரைவில் கைதி கைது செய்யப்படுவார் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்