தமிழ்நாடு

ஆன்லைன் வாசிகளே உஷார்.. புதுவையில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

புதுச்சேரியை சேர்ந்த நபர் ஒருவர், தன் இன்ஸ்டா பக்கத்தில் வந்த உடனடி கடன் செயலி விளம்பரத்தின் மூலமாக 5 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இரண்டு நாட்களுக்கு பின், செயலி சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். வாங்கிய 5 ஆயிரம் ரூபாய் கடனிற்கு, 20 ஆயிரம் ரூபாய் திருப்பி செலுத்தும்படி கூறியுள்ளார். கடன் வாங்கிய நபர் பணம் தர மறுத்த நிலையில், அவரது புகைப்படத்தை, நிர்வாணமாக சித்தரித்து நண்பர்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டியுள்ளார் மர்ம நபர். அதிர்ச்சியடைந்த கடன் வாங்கிய நபர், உடனடியாக அவர் கேட்ட தொகையை கட்டியுள்ளார். சில நாட்களில் மீண்டும் தொடர்பு கொண்ட மர்ம நபர், 10 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். பணத்தை தர மறுத்த நிலையில், கடன் வாங்கியவரின் புகைப்படத்தை நிர்வாணமாக சித்திரித்து, அவரது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். அதிர்ச்சியடைந்த கடன் பெற்ற நபர், சைபர் க்ரைம் போலீசாரிடம் புகாரளித்துள்ள நிலையில், தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்