தமிழ்நாடு

4 ஆண்டுகளாக பெண்களை குறிவைத்து கொல்லும் கொடூர கொலைகாரன்

கடந்த நான்கு ஆண்டுகளாக பெண்களை குறி வைத்து கொலை செய்து வந்த கொடூர கொலைகாரன் குறித்த தகவல்கள் புதுச்சேரி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

புதுச்சேரி வில்லியனூர் அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த சித்தமருத்துவர், தமிழ்ச்செல்வி. நீண்ட நேரமாகியும், கடந்த சனிக்கிழமை இரவு தமிழ்ச்செல்வி வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த தமிழ்ச்செல்வி குடும்பத்தார், அவரது மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர். அங்கு கழுத்து அறுபட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார், தமிழ்ச்செல்வி. அதை பார்ர்த்து திடுக்கிட்ட அவர்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தமிழ்ச்செல்வி கொடுத்த தகவலின் படி, அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்தனர். ஆறுமுகத்தை விசாரணை செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி யிருக்கின்றன. தனியாக இருக்கும் பெண்களை கொலை செய்து நகைகளை கொள்ளையடிப்பதையே ஆறுமுகம் வழக்கமாக கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஆட்கள் குறைவாக இருக்கும் சித்தா மருத்துவமனையில் தமிழ்ச்செல்வி தனியாக இருப்பதை பயன்படுத்தி அவரது நகைகளை ஆறுமுகம் கொள்ளையடிக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

வயர் மூலம் தமிழ்ச்செல்வி கழுத்தை நெரித்து கொலை செய்ய ஆறுமுகம் முயற்சி செய்திருக்கிறார். அதில் தமிழ்ச்செல்வி மயங்கி விழ, அவர் இறந்துவிட்டதாக நினைத்து அங்கிருந்து தப்பி ஓடியாதாக போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கு முன்பு முத்தியால் பேட்டையை சேர்ந்த கலைவாணி, கிருஷ்ண‌வேணி ஆகியோரையும் கொலை செய்து, அவர்களது நகைகளை திருடி சென்றதை ஆறுமுகம் ஒப்புக்கொண்டுள்ளார். தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து தொடர் கொலைகள் அரங்கேறியிருப்பது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி