தமிழ்நாடு

புதுச்சேரி : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் பகுதியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் பகுதியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரோவில் பகுதியில் வசித்து வந்தவர் சுந்தரமூர்த்தி. அவரது மனைவி மகேஸ்வரி ஆரோவில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்களது மூத்த மகள் கிருத்திகா 12ஆம் வகுப்பும், இளைய மகள் சமிக்ஷா எட்டாம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில் அவர்களது உறவினர்கள் கடந்த திங்கள் கிழமை அன்று, மகேஸ்வரியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அதன் பின்பு நேற்று தொடர்பு கொள்ள முயர்சித்த போது சுந்தரமூர்த்தி, மகேஸ்வரியின் செல்போன்கள் அனைத்து வைக்கப்பட்ருந்தது. இதனால் சந்தேகமடைந்து நேரில் வந்து பார்த்த உறவினர்கள், 4 பேரும் தற்கொலை செய்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார், 4 பேரின் உடல்களையும் மீட்டு, தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு