தமிழ்நாடு

மின் கட்டண வசூல் மையங்கள் மூடல் - மின் கட்டணத்தை செலுத்த முடியாத மக்கள்..

புதுச்சேரியில் உள்ள மின் நுகர்வோர்கள் இன்று முதல் அந்தந்த மையங்களில் மின் கட்டணத்தை செலுத்தலாம் என மின் துறை அறிவித்திருந்தது.

தந்தி டிவி

புதுச்சேரியில் உள்ள மின் நுகர்வோர்கள் இன்று முதல் அந்தந்த மையங்களில் மின் கட்டணத்தை செலுத்தலாம் என மின் துறை அறிவித்திருந்தது. அதனடிப்படையில் பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்த வந்தனர். ஆனால் மின் கட்டண வசூல் மையங்கள் திறப்பு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அலுவலக வாயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்ததால், பொதுமக்கள் திரும்பி சென்றனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள மின்வாரிய அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்த பின்பே, வசூல் மையங்கள் திறக்கப்படும் என தெரிவித்தனர்.

CM Vijay | TVK | VCK | Minister | தவெக அமைச்சரவையில் விசிக, IUML - வந்தது அறிவிப்பு

VCK | Thirumavalavan | TVK | தவெகவுடன் விசிக கூட்டணி ? திருமா பரபரப்பு பிரஸ்மீட்

🔴LIVE : நாளை காலை அமைச்சராகும் விசிக வன்னியரசு

TVK | CM Vijay | Thirumavalavan | "விஜய் அமைச்சரவையில் விசிக.." முறிகிறதா திமுக உடனான கூட்டணி..?

🔴LIVE : VCK | Thirumavalavan | TVK | வரலாற்றில் முதல் முறையாக அமைச்சரவையில் விசிக - அறிவித்த திருமா