பழனியில் தனியார் பள்ளிக்கு சவால் விடும் அளவுக்கு ஸ்மார்ட் வகுப்புகளை அறிமுகம் செய்து செயல்பட்டுவருகிறது ஒரு அரசு நகராட்சி பள்ளி.
பழனி அடிவாரம் பகுதியில் அரசு நகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்தாண்டு ஸ்மார்ட் பள்ளியாக இப்பள்ளி உருமாறியதில் இருந்து மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.இங்கு கூடுதல் வசதிகளாக மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எல்.இ.டி திரையுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள், எண்ணற்ற நவீன சாதனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் உற்சாகத்தோடு கல்வி கற்பதாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.