தமிழ்நாடு

வரும் 31 ஆம் தேதி 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு - 12ஆம் வகுப்பு மறுத்தேர்வு முடிவும் வெளியாகிறது

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்பு மறு தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களின் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்பு மறு தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களின் தேர்வு முடிவுகள், நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன், தேர்வுகள் இயக்கக இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு தே​ர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி முற்றும் இணையதளம் வாயிலாக மதிப்பெண் பட்டியல் வழங்குவதற்கான தேதி மற்றும் வழிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்