தமிழ்நாடு

10,11,12 தேர்வு வினாத்தாள் - மீண்டும் மாற்றம்?

10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு, புளூ பிரின்ட்" முறை கைவிடப்பட்ட நிலையில், மீண்டும் அந்த முறையை கொண்டு வரப்போவதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிவித்துள்ளன.

தந்தி டிவி

10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு, புளூ பிரின்ட்" முறை கைவிடப்பட்ட நிலையில், மீண்டும் அந்த முறையை கொண்டு வரப்போவதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிவித்துள்ளன. இது குறித்து தேர்வுத்துறை அதிகாரி பொங்கல் விடுமுறைக்கு பிறகு ஒவ்வொரு பாடத்திலும் ஆறு மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய வினாத்தாள் தொகுப்பு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் வெளியிடப்படும் என கூறினார். வினாத்தாளில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மதிப்பெண்கள் விவரம் தேர்வுத் துறையால் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ஆசிரியர்களுக்கு பாடப்புத்தக்கத்தில் உள்ள ஒவ்வொரு பாடத்தில் இருந்தும் எந்த அலகில் எத்தனை மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும் என்பது கூறப்படும் எனவும், இதனால் மெல்லக் கற்கும் மாணவர்கள் பாடப்புத்தகத்தை முழுவதுமாக படிக்க வேண்டிய அவசியமில்லாமல் எளிதான பாடங்களை படித்து தேர்ச்சி பெற முடியும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார். இதனால் கைவிடப்பட்ட ப்ளூ பிரின்ட் முறை மீண்டும் அமல்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்