தமிழ்நாடு

இளம்பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக நினைத்து அவரது கணவரையே பொதுமக்கள் புரட்டியெடுத்த சம்பவம் ஏர்வாடியில் நிகழ்ந்துள்ளது.

இளம்பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக நினைத்து அவரது கணவரையே பொதுமக்கள் புரட்டியெடுத்த சம்பவம் ஏர்வாடியில் நிகழ்ந்துள்ளது.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த ரோஷன் பானு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவரை தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் ரோஷன் பானு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மணி ரோஷன் பானு வீட்டுக்கு அடிக்கடி யாருக்கும் தெரியாமல் சென்று வந்துள்ளார். அதேபோல் நள்ளிரவில் ரோஷன் பானு வீட்டுக்குள் நுழைந்த மணியை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர் கள்ள தொடர்பில் ஈடுபட்டுள்ளார் எனக்கூறி அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். இதனிடையே தனது கணவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி ரோஷன் பானு அளித்த புகாரின் பேரில் ஒருவரை கைது செய்த போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் ஏர்வாடி காவல் நிலையத்தை இரவில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கைது செய்தவரை விடுவிக்க கோரியும் வழக்குப்பதிவை ரத்து செய்ய வலியுறுத்தியும் 200க்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி