தமிழ்நாடு

சென்னையை உலுக்கிய சைக்கோ கொலையாளி - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

சென்னையில் மது போதையில் சாலையில் உறங்குபவர்களை ஓரின சேர்க்கைக்கு அழைத்து, அவர்களது பிறப்பு உறுப்பை அறுத்து கொன்ற சைக்கோ கொலையாளி, போலீசார் வசம் சிக்கியுள்ளான்

தந்தி டிவி

கடந்த வாரம், சென்னை மாதவரம் மேம்பாலத்தின் கீழ் அஸ்லாம் பாஷா என்ற நபர் பிறப்பு உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். போலீசார் விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக தானாகவே பிறப்பு உறுப்பை அறுத்துக்கொண்டதாக தெரிவித்த அஸ்லாம் பாஷா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் பாஷா இறப்பில் மர்மம் உள்ளதாக அவரது மனைவி அளித்த புகார், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாரின் சந்தேகத்திற்கு வலு சேர்க்கும் விதமாக அரங்கேறியது மற்றொரு பயங்கரம்... அஸ்லாம் பாஷா கொல்லப்பட்ட அதே பாணியில், பிறப்புறுப்பு அறுக்கப்பட்ட நிலையில், மீட்கப்படுகிறார் லாரி ஓட்டுநர் நாராயணசாமி. ஆரம்பத்தில் நாராயணசாமியும், தவறுதலாக தானே பிறப்புறுப்பை அறுத்துகொண்டதாகவே தெரிவித்துள்ளார். ஆனால், அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ச்சியில் இருந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில், வெளியாகியுள்ளது அந்த திடுக்கிடும் தகவல்.

அஸ்லாம் பாஷாவிற்கும், நாராயணசாமிக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, இருவரும் மிதமிஞ்சிய மது போதையில் சாலையோரம் படுத்து கிடந்தது தான்... எனவே சாலையோர சிசிடிவி கேமரா காட்சிகளை சல்லடை போட்டு அலசியது காவல்துறை. போலீசார் எதிர்பார்த்தது போலவே இருசம்பங்களிலும் ஈடுபட்டது ஒரே சைக்கோ மனிதர் தான்... அந்த மர்ம நபர் இருசக்கரவாகனத்தில் வந்த இளைஞர்கள் இருவரை, ஓரின சேர்க்கைக்கு அழைப்பதும், அவரிடம் இருந்து இளைஞர்கள் தப்பி செல்வதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து, ஊடகங்கள் உதவியோடு தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது காவல்துறை. இதன் பலனாக சென்னை வில்லிவாக்கத்தில் மீன் கடை ஒன்றில் வேலைபார்த்துவந்த மானாமதுரையை சேர்ந்த, முனுசாமி என்பவர் போலீசார் வசம் சிக்கியுள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்த போது, ஓரின சேர்க்கைக்கு ஒத்துழைக்காததால், அஸ்லாம் பாஷா மற்றும் நாராயணசாமி ஆகியோரது பிறப்பு உறுப்பை அறுத்ததாக ஒப்புகொண்டுள்ளார் முனுசாமி.

முனுசாமியை கைது செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி