தமிழ்நாடு

குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு - மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் முற்றுகை

சொத்து வரி உயர்வு, 24 மணி நேர குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் கொடுத்ததை கண்டித்து கோவை குனியமுத்தூர் பகுதியில் போராட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
சொத்து வரி உயர்வு, 24 மணி நேர குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் கொடுத்ததை கண்டித்து கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக முற்றுகையிட்டு அனைத்துக்கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் திமுக, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பங்கேற்றன. இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற பொள்ளாச்சி திமுக எம்.பி. சண்முகசுந்தரம், கோவை சிபிஎம் எம்.பி. பி.ஆர்.நடராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, தடையை மீறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு