தமிழ்நாடு

பிளாஸ்டிக் தடையை திரும்ப பெறக் கோரி 13ஆம் தேதி போராட்டம் - சுவாமிநாதன்

பிளாஸ்டிக் தடையை திரும்ப பெறக் கோரி வரும் 13ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் சுற்றுச் சூழல் கமிட்டி தலைவர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பிளாஸ்டிக் தடையை திரும்ப பெறக் கோரி வரும் 13ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தின் சுற்றுச் சூழல் கமிட்டி தலைவர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு அறிவித்துள்ள பிளாஸ்டிக் தடையால் தமிழகத்தில் 2 லட்சம் பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார். இந்த தடை மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், இந்த தடையால் அரசுக்கு 1800 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும் என்றார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்