கோவை மாவட்டம் ராமநாதபுரம் பங்கஜம் மில், ருக்மணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக்கூறி, பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற போலீசாருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.