இறந்தவர் உடலை போலீசார் பலகட்ட பேச்சு வார்த்தைக்கு பின்னரும் கேட்டதற்கு ஊர் பொதுமக்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை இதனால் காவல்துறையினர் அதிரடியாக செயல்பட்டு இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத வாகனத்தில் ஏற்றி அனுப்பினர் அப்போது திரண்டு இருந்த பொதுமக்கள் கற்களை வீசி தாக்கத் தொடங்கினர் பின்னர் போலீஸ் வாகனங்களையும் தேடிச்சென்று கற்களை கொண்டு தாக்க துவங்கினர் இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது