தமிழ்நாடு

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டையில் போராட்டம் : மாணவிகள் - போலீஸ் இடையே தள்ளுமுள்ளு

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

தந்தி டிவி

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து, புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மாணவ, அமைப்பை சேர்ந்த மாணவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை பெற்று தருவதோடு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றனர். இதனால், வாகனத்தை மறித்து சாலையில் அமர்ந்த மாணவிகள், அவர்களை விடுதலை செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனத்தில் இருந்து மாணவர்கள் இறக்கிவிடப்பட்டதை தொடர்ந்து, மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்