தமிழ்நாடு

Thiruvarur | டாஸ்மாக்கில் பிரச்சினை.. GH-ல் மாறி மாறி அடித்துக்கொண்ட இருதரப்பினர் - அதிர்ச்சி வீடியோ

டாஸ்மாக்கில் பிரச்சினை.. GH-ல் மாறி மாறி அடித்துக்கொண்ட இருதரப்பினர் - அதிர்ச்சி வீடியோ

thanthitv

டாஸ்மாக்கில் பிரச்சினை.. GH-ல் மாறி மாறி கொடூரமாய் அடித்துக்கொண்ட இருதரப்பினர் - அதிர்ச்சி வீடியோ #Thiruvarur #hospital #governmenthospitals #attack #thanthitv திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற மோதல் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மடப்புரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், நாலாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மது வாங்க சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்தபோது வாகனம் கீழே விழுந்திருந்தது குறித்து அங்கு இருந்த சிவாவிடம் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தடுக்க முயன்ற பிரபாகர் என்பவரை, சிவா கையில் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பிரபாகர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற நிலையில், அங்கு இருதரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் போலீசார் தடுக்க முயன்றும் சண்டை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CUET Exam | தாமதமான `CUET’ தேர்வு.. தொழில்நுட்ப கோளாறால் பரபரப்பு

Electric trains | Time Table | மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. புது அட்டவணை இதோ!

Tasmac Issue | மீண்டும் திறக்கப்பட்ட‌ டாஸ்மாக்.. தி.குன்றத்தில் கிளம்பிய சர்ச்சை

#BREAKING || Alangulam | தமிழகத்தையே உலுக்கிய ஆலங்குளம் சம்பவம்.. ட்ரோன் வைத்து தூக்கிய போலீசார்

TVK | ADMK | தவெக அரசுக்கு ஈபிஎஸ் வைத்த செக்மேட்