சென்னை பெரம்பூரில் அகில இந்திய இரயில்வே தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் மத்திய அரசு தொடர்ந்து இரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் வேலை நிறுத்தம் உள்ளிட்ட, முக்கிய முடிவுகளை அறிவிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.