தமிழ்நாடு

தனியார் பள்ளியில் ஆசிரியை வெட்டி கொலை : ஒருதலை காதலால் கொடூரம்

தனியார் பள்ளி வளாகத்தில் ஆசிரியை ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

குறிஞ்சிப்பாடி சின்னக் கடை வீதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகள் ரம்யா, அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இன்று காலை பள்ளிக்கு சென்ற ஆசிரியை ரம்யா, வளாகத்தில் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ரம்யாவை தாக்கியதுடன், ஆட்டை அறுப்பதை போல் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார்.

இதில் ரம்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ஆசிரியை ரம்யாவை ஒருதலையாக காதலித்து வந்த விருத்தாசலத்தை சேர்ந்த ராஜசேகர், இந்த கொலையை செய்தது போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ரம்யாவை வீட்டுக்கு நேரடியாக சென்று பெண் கேட்ட ராஜசேகர், தர மறுத்ததால், ஆத்திரத்தில் கொலை செய்ததாக தெரிகிறது. தலைமறைவான அவரை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்