தமிழ்நாடு

தனியார் தண்ணீர் லாரி வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

தனியார் தண்ணீர் லாரிகள் சங்கத்தினர் அறிவித்திருந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கடும் வறட்சி நிலவுவதை தொடர்ந்து, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஐ.டி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள், நட்சத்திர உணவகங்கள், தனியார் குடியிருப்புகளுக்கு தனியார் தண்ணீர் லாரிகள் குடிநீர் வினியோகம் செய்து வருகின்றன. இந்நிலையில், அண்மையில் மனு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தண்ணீர் திருட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அனுமதியின்றி தண்ணீர் எடுத்த தனியார் தண்ணீர் லாரிகள் பறிமுதல், சீல் வைப்பு நடவடிக்கைகள் பாய்ந்தன. இதைக் கண்டித்து, இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்தனர். இதனிடையே, முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர், பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு செல்வதால் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் திரும்பியவுடன் சந்தித்துவிட்டு போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளனர். இதனால், போராட்டத்தை தள்ளி வைத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்