தமிழ்நாடு

தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் - 15% கல்வி கட்டணம் உயர வாய்ப்பு

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டண நிர்ணயம் தொடர்பான பரிந்துரைகளை ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி

அரசு நியமித்துள்ள தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயக் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பள்ளிகள், கல்விக் கட்டணம் நிர்ணயம் தொடர்பான பரிந்துரைகளை விண்ணப்பிக்கலாம் என்றும் அதனுடன் 2019-20ஆம் கல்வி ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 20ஆம் தேதி முதல் செப்டம்பர் 25ஆம் தேதிக்குள் tnfeecommittee.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரிந்துரைகள் குறித்து ஆலோசனை செய்து, நிர்ணயிக்கப்படும் புதிய கல்வி கட்டணம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆறாயிரம் தனியார் பள்ளிகள் வசூலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்தபட்சம் 15 விழுக்காடு முதல், அதிகபட்சம் 20 விழுக்காடு வரை பள்ளிகளுக்கு தகுந்தாற்போல் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்