salem | protest பிரைவேட் பஸ் vs கவர்மென்ட் பஸ் வெடித்த பிரளயம் பதறியடித்து Spot-க்கு பறந்த போலீஸ்
ஆத்தூர் - எஸ்.ஐ மீது நடவடிக்கை கோரி தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீண்டும் மறியல் சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில், பேருந்து இயக்கும் நேரப் பிரச்சனை தொடர்பாக அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த நகர காவல் உதவி ஆய்வாளர் சிவசக்தி, தனியார் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.இதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஓட்டுநர்கள், எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீண்டும் பேருந்து நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல் ஆய்வாளர் சங்கர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.