தமிழ்நாடு

பிரதமர் மோடி வருகை.. திருச்சி விமான நிலையத்தை சுற்றிவளைத்த போலீஸ் பாதுகாப்பு

தந்தி டிவி

பிரதமர் வருகையை ஒட்டி திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். தமிழகம் வரும் அவர், 26ஆம் தேதி மாலை தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைக்க உள்ளார். இதனை தொடர்ந்து 27-ம் தேதி திருச்சி விமான நிலையம் சென்று, ஹெலிகாப்டர் மூலம் கங்கை ​​கொண்ட சோழபுரத்தில் ஆடித்திருவாதிரை விழாவில் பங்கேற்று பேசுகிறார். இதையடுத்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

இதன் காரணமாக திருச்சி பழைய விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்புடன் 6 மோப்ப நாய்கள் மூலம் வெடிகுண்டு சோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தப் பாதுகாப்பு வரும் 28 ம் தேதி வரை அமலில் இருக்கும் என கூறப்படுகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்