தமிழ்நாடு

அதிமுக, பாஜகவுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி

அதிமுக, பாஜகவுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி

தந்தி டிவி

சென்னை விமான நிலைய ஓய்வறையில், அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் தனித்தனியாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்டெல்லி செல்வதற்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் சென்ற பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் சால்வை அணிவித்தார். அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, திமுக எம்.பி., டி.ஆர். பாலு ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக விமான நிலைய ஓய்வறையில் இருந்த பிரதமர் மோடியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி, வைத்தியலிங்கம் ஆகியோர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. அதன் தொடர்ச்சியாகமதுரை ஆதீனம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனைத்தொடர்ந்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர்கள் சி.டி. ரவி, சுதாகர் ரெட்டி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். ஒரு மணி நேரம் நீடித்த சந்திப்புக்கு பின்னர், டெல்லி புறப்பட்ட பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்