ஊரடங்கு நீட்டிப்பால் கோயில் அர்ச்சகர்களுக்கு மேலும் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட அனைத்து வித கோயில்களிலும் பணியாற்றும் நாவிதர், காது குத்துபவர், பண்டாரம், கங்காணி, நாதஸ்வரம் வாசிப்பவர், குயவர், புரோகிதர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் இந்த ஆயிரம் ரூபாயை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம் 10 ஆயிரத்து 448 பேர் பலனடைவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே இவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.