தமிழ்நாடு

வாழைத்தார் விலை அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தாரின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தாரின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சந்தையில், வாழைத்தார்கள் நல்ல விலைக்கு விற்பனையானது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு அதிக விலைக்கு விற்பனை ஆகியதாக தெரிவித்துள்ள விவசாயிகள், மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறி மகிழ்ச்சியடைந்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்