தமிழ்நாடு

இன்று தமிழகம் வரும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

குடியரசு தலைவர், ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று மதியம் சென்னை வருகிறார்.

தந்தி டிவி

குடியரசு தலைவர், ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று மதியம் சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வரும் குடியரசு தலைவருக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் ஆளுனர் மாளிகைக்கு செல்லும் ராம்நாத் கோவிந்த் அங்கு மதிய உணவை முடித்து விட்டு ஒய்வெடுக்க உள்ளதாக தெரிகிறது.

பின்னர், மாலை 4 மணிக்கு தியாகராய நகரில் உள்ள ஹிந்தி பிரச்சார சபாவிற்கு செல்கிறார். அங்கு நடக்கும் விழாவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைக்கவுள்ளார். பின்னர் நாளை காலையில் ராணுவ ஹெலிகாப்டரில் நெல்லூர் செல்லும் ராம்நாத் கோவிந்த், பின்னர் சென்னை வழியாக தனி விமானத்தில் டெல்லிக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்