திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கை வசதி இன்றி தரையில் அமர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக கர்ப்பிணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
6 மாடிகட்டம் கொண்ட திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் படுக்கைகள் இல்லை என பிரசவித்திற்கு வரும் கர்ப்பிணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். படுக்கையறை வேண்டும் என கேட்டால் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக பதிலளிப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். எனவே பிரசவத்திற்கு வரும் அனைவருக்கும் படுக்கை அறை ஏற்படுத்தி தரவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.