தமிழ்நாடு

யூ-டியூப் பார்த்து காதலன் பிரசவம் - துண்டான சிசுவின் கை

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர், யூ-டியூப் பார்த்து தானே பிரசவம் பார்த்த பதைபதைக்க வைக்கும் கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. 20 கிலோ மீட்டர் ரத்தம் சொட்ட, சொட்ட மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்ற கொடுமை

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த 27 வயது சவுந்தர் என்ற இளைஞர் சிலிண்டர் தூக்கும் வேலை செய்து வருகிறார். அதே பகுதி சேர்ந்த கல்லூரி மாணவியும், சவுந்தரும் காதலித்து வந்தனர். இருவரும் நெருங்கிப் பழகியதில், மாணவி 8 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதுவரை ஏற்படாத சிக்கலை தற்போது அவர்கள் சந்தித்தனர்.

எட்டு மாத கர்ப்பம் ஆன நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கல்லூரி மாணவி வற்புறுத்தி உள்ளார். ஆனால், சவுந்தர் வீட்டார், இந்தக் காதலை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு பகுதியில் உள்ள வனப் பகுதிக்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கு யூடியூப் பார்த்து காதலனே, பிரசவம் பார்த்துள்ளார். இதில், குழந்தையின் கை துண்டானது.

நஞ்சுக் கொடி என நினைத்து, காதலியின் குடலையும் அறுத்துள்ளார். வலியால் துடித்திருக்கிறார், கல்லூரி மாணவி... வயிற்றுக்குள் இருந்த குழந்தையுடன், இருவரும் மோட்டார் சைக்கிளில் பொன்னேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். கும்மிடிப்பூண்டி மருத்துவமனையில், இறந்த சிசுவை எடுத்த நிலையில், பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவத்தில், காதலன் சவுந்தரை பிடித்து விசாரித்து வருகின்றனர். குழந்தையை கொலை செய்யும் நோக்கில் அழைத்துச் சென்றதாக கொலை முயற்சி வழக்கு பதிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மகளின் 8 மாத கர்ப்பம் தமக்கு தெரியாது என பெண்ணின் தாயார் கூறியுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்